மாஸ்டரில் இவங்கெல்லாம் எதுக்கு வந்தாங்க? எங்க போனாங்க? கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

13 January 2021, 9:57 pm
Quick Share

மாஸ்டர் படத்தில் இத்தனை பிரபலங்கள் ஏன் நடித்தார்கள், இத்தனை பேரும் எங்கு போனார்கள் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு ஒவ்வொருவரின் கதாபாத்திரங்கள் அமைந்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தணு, நாசர், பிரிகிதா, தாரா, சாய் தீனா, அர்ஜூன் தாஸ், பூவையார், ரம்யா பாண்டியன், தீனா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம் குமார், அழகம் பெருமாள்,

சேட்டன், லிண்டு ரோனி, உதயராஜ், அருண் அலெக்சாண்டர், குலப்புல்லி லீலா, மகேந்திரன், கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆனால், படம் முழுவதும் வருவது அர்ஜூன் தாஸ், விஜய் சேதுபதி, விஜய் ஆகிய 3 கதாபாத்திரங்கள் மட்டுமே. அப்படியிருக்கும் போது இடையிடையே வருவதற்கு எதற்கு இத்தனை கதாபாத்திரங்கள். சும்மா கல்லூரியில் நடக்கும் கதைக்கு மட்டுமே இத்தனை கதாபாத்திரங்களை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது கைதி படத்தின் கதையை மாற்றியமைக்கவே இது போன்று செய்திருக்கிறார்.

பிரிகிதா, தாரா ஆகியோருக்கு எந்த டயலாக்கும் இல்லை. பிரேம் குமார், சாந்தணு ஆகியோர் விபத்தில் இறக்கிறார்கள். ஆனால், அவர்களது உடலை கூட பார்க்க மாஸ்டர் செல்லவில்லை. படத்தின் கிளைமேக்ஸில் ஆண்ட்ரியா வருகிறார். அதுவும் வில்வித்தை வீராங்கனையாக வருகிறார். ஆனால், ஹீரோயின் வரவில்லை. அப்புறம் எதுக்கு இந்தப் படத்தில் மாளவிகா மோகனன். அதான் கார்த்தி நடித்த கைதி படத்தில் ஹீரோயினே இல்லையல்லவா, அதான் இந்தப் படமும்.

ஆனால், படம் தொடங்குவதே மாளவிகா மோகனனிடம் இருந்து தான். எப்படி என்றால், விஜய் சிறுவர் சீர்திருத்த பள்ளி வருவதும், இரு சிறுவர்கள் கொலை செய்யப்படுவதும், அதன் பிறகு விஜய்யை காவல்துறையினர் கைது செய்வதும், அங்கு மாளவிகா மோகனன் வந்து அவருக்கு அறிவுரை வழங்குவதும், நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறுவதும் தான். அப்படியிருக்கும் போது அவர் கிளைமேக்ஸ் வராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில், இது விஜய்க்குரிய கதை இல்லை.

40 லாரி, இருட்டு, போதைப்பொருள், சிறைச்சாலை என்று கைதி படத்தைத்தான் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஞாபகப்படுத்தியிருக்கிறார். எனினும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம். இவர்களது அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. கிளைமேக்ஸில் விஜய் வாடா மச்சி வாழக்கா பச்சி என்று பாட்டு பாடுவதும், விஜய் சேதுபதி பாட்டு பாடுவதும் என்று அலப்பறைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

Views: - 15

0

0