விஜய்யுடன் நடிக்கும் போது சிம்ரன் செய்த செயல் : படப்பிடிப்பை ரத்து செய்த இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 பிப்ரவரி 2023, 10:06 காலை
Simran - Updatenews360
Quick Share

நடிகை சிம்ரன் செய்த செயலால் ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இவருடைய இயக்கத்தில் அவரது மகனான நடிகர் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். இன்று அவர் தளபதியாக வலம் வர எஸ்ஏசி முக்கிய காரணமாக உள்ளார்.

அப்படி தனது தந்தையான எஸ்ஏசி இயக்கிய படங்களில் ஒன்றுதான் ஒன்ஸ் மோர். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

ஒன்ஸ்மோர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், படப்பிடிப்புக்கு நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார். இதனால் கடுப்பான எஸ்.ஏ.சி உடனடியாக படப்பிடிப்பை Pack அப் செய்துவிட்டாராம்.

கொஞ்சம்தான் தாமதம் ஆனது என சிம்ரன் எடுத்துக்கூறியும் கோபம் தணியாத எஸ்ஏசி படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். அந்த அளவிற்கு அவர் ஸ்ட்ரிக்ட்டான இயக்குனராக இருந்தாராம்.

  • சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து… தொடரும் சோகம் : நடந்தது என்ன?
  • Views: - 706

    0

    1