செம டேஸ்டான கருப்பு கேரட் மற்றும் தேங்காய் பால் சூப்!!!

11 January 2021, 10:29 am
Quick Share

குளிர்கால காய்கறிகளில் ஒன்று நாட்டின் வடக்குப் பகுதிகளில் கிடைக்கும் கருப்பு அல்லது ஊதா நிற கேரட். மேலும், இந்த கேரட்டுகள் மிகவும் பரவலாகக் கிடைக்கும் வழக்கமான ஆரஞ்சு நிற  கேரட்டுகளை விட அதிக இனிப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த கேரட் கொண்டு ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான சூப் எப்படி செய்வது என பார்க்கலாம். இந்த சூப்பை மிக விரைவாக செய்து முடித்து விடலாம். மேலும்  இதற்கு மிகக் குறைவான பொருட்களே தேவைப்படுகிறது. இந்த சூப் குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு அற்புதமான ரெசிபி.    

தேவையான பொருட்கள்: கருப்பு / ஊதா கேரட் – 1/2 கிலோ 

வெங்காயம்- 1  இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி 

எண்ணெய் – 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு- 1 பழத்திலிருந்து எடுக்கப்பட்டது 

தேங்காய் பால் – 1/2 கப் உப்பு- சுவைக்க  

செய்முறை: 

* கேரட்டை கழுவி தோல்  உரித்து வைக்கவும். இதனை ஒரு குக்கரில் போட்டு 2-3 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை சமைக்கவும். 

* வேக வைத்த கேரட்டை ஆற விடவும். பின்னர் இதனை தோராயமாக  நறுக்கி கொள்ளவும். கேரட் வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டாம்.   

* ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை குறைந்த தீயில் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், ​​இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

* இப்போது கேரட் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். 

* அடுப்பை அணைத்து கலவையை ஆற வைக்கவும். 

* ஆறிய பின்னர் இந்த கேரட்-வெங்காய கலவையை அரைத்து, இதனோடு நாம் சேகரித்து வைத்த கேரட் தண்ணீரை ஊற்றி கலக்கவும். 

* பின்னர், சூப்பை மீண்டும் வாணலிக்கு மாற்றவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும். 

* இது போதுமான சூடாக இருக்கும்போது, ​​அடுப்பை  அணைத்து எலுமிச்சை  சாறு சேர்த்து கலக்கவும்.  

* பரிமாறும் போது, சூப்பை கிண்ணங்களில் ஊற்றி, தேங்காய்ப் பால் மற்றும்  கொத்தமல்லி இலை சேர்த்து கொடுக்கவும்.