இன்றைக்கு டின்னருக்கு டிரை பண்ணி பாருங்க சாஃப்டான புல்கா!!!

Author: Hemalatha Ramkumar
7 October 2021, 12:35 pm
Quick Share

பெரும்பாலான பெண்களுக்கு இன்று என்ன சமைப்பது என்ற குழப்பம் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் சலிப்பு தட்டிவிடும். எனவே வித்தியாசமாகவும், அதே சமயம் எளிமையாகவும் இருக்கும் உணவுகளை செய்து கொடுத்து குடும்பத்தாரை அசத்த உங்களுக்கு பல ரெசிபிகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது புல்கா. கோதுமை மாவு வைத்து எப்போதும் சப்பாத்தி, பூரி தான் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. புல்கா போன்ற ரெசிபிகளையும் முயற்சி செய்து பாருங்கள். இப்போது புல்கா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 2 கப்
சுடு தண்ணீர்
உப்பு

செய்முறை:
*ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

*இந்த மாவு பிசைவதற்கு தேவையான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை பிசையவும்.

*பத்து நிமிடங்கள் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

*மாவு சாஃப்டாக மாறியதும் அதனை ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

*மாவு ஊறியதும் ஐந்து நிமிடங்கள் மட்டும் பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும்.

*உருண்டைகளை சப்பாத்தி கட்டையால் தேய்த்து வைத்து கொள்ளுங்கள்.

*இப்போது தோசைக்கல்லினை அடுப்பில் வைத்து அதில் சப்பாத்தியை போட்டு வேக விடவும்.

*மாவின் மேல் பக்கத்தில் குட்டி குட்டி முட்டைகள் வரத் தொடங்கியதும் மறுபக்கம் திருப்பி போடவும்.

*இந்த பக்கத்தை அதிக நேரம் தோசைக்கல்லில் வைக்க வேண்டாம்.

*உடனடியாக இதனை நேரடியாக அடுப்பில் வைத்து புல்கா உப்பியதும் எடுத்து விடலாம்.

*புல்கா மேல்புறத்தில் சிறிதளவு வெண்ணெய் தேய்த்து சூடாக பரிமாறவும்.

Views: - 331

0

0