உருளைக்கிழங்கில் இப்படி ஒரு ரெசிபியா… அச்சாரி உருளைக்கிழங்கு வறுவல்!!!

Author: Hemalatha Ramkumar
3 October 2021, 2:05 pm
Quick Share

உருளைக்கிழங்கு பிடிக்காதுன்னு யாரும் சொல்லி பெரும்பாலும் கேட்டிருக்க மாட்டோம். ஏனெனில் அது அத்தனை சுவையானது. உருளைக்கிழங்கு வைத்து ஏராளமான உணவு வகைகளை நாம் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது வட இந்திய ரெசிபியான அச்சாரி உருளைக்கிழங்கு வறுவல். இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 6
கடுகு எண்ணெய்- 2 தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
மிளகாய் தூள்- ஒரு சிட்டிகை
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
ஆம்சுர் பவுடர்- ஒரு சிட்டிகை
கருஞ்சீரகம்- 1/2 தேக்கரண்டி
ஊறுகாய்- 2 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு

செய்முறை:
*அச்சாரி உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கினை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.

*உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதனை தோல் நீக்கி வட்ட வடிவில் நறுக்கவும்.

*இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

*இதில் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து இருபுறமும் வறுக்கவும்.

*அடுத்ததாக உருளைக்கிழங்கு மீது மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா, உப்பு மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து பத்து நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

*உருளைக்கிழங்கு பொன்னிறமாக வறுப்பட்டவுடன் அதன் மீது ஊறுகாய் சேர்த்து நன்கு கிளறவும்.

*அவ்வளவு தான்… டேஸ்டான அச்சாரி உருளைக்கிழங்கு தயார்.

Views: - 665

0

0