உடையாமல் பக்குவமாக ருசியான சோமாஸ் செய்வது எப்படி???

9 November 2020, 8:34 am
Quick Share

சோமாஸ் என்பது தமிழகத்தின் பாரம்பரிய செய்முறையாகும். இது குறிப்பாக தீபாவளியின்போது பண்டிகைகளின் போது தயாரிக்கப்படுகிறது. ருசியான சோமாஸ்களை உருவாக்குவதன் மூலம் இந்த பண்டிகை காலத்தை சிறப்பானதாக மாற்றுவோமா..??? இப்போது சரியான முறையில் சோமாஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வெளிப்புற மாவு:-

1 கப் மைதா (125 கிராம்)

2 தேக்கரண்டி ரவை

ஒரு சிட்டிகை உப்பு

1 தேக்கரண்டி நெய்

6 தேக்கரண்டி தண்ணீர் அல்லது தேவைக்கேற்ப

பூர்ணம் செய்ய:-

1/4 கப் பொட்டுக்கடலை

1 தேக்கரண்டி நெய்

1/4 கப் முந்திரி

1/2 கப் அரைத்த தேங்காய்

1/2 கப் சர்க்கரை

3 ஏலக்காய்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, உப்பு, ரவை மற்றும் நெய் சேர்க்கவும். நன்கு கலந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஒரு கடினமான மாவை தயாரிக்கவும். குறைந்தபட்சம் 10 – 12 நிமிடங்கள் மாவை பிசைந்து அதனை சாப்ஃடாக மாற்றுங்கள். மாவை பிசைந்த பிறகு அதனை மூடி தனியாக  வைக்கவும்.

பொட்டு கடலையை ஒரு கடாயில் 2 -3 நிமிடங்கள் நடுத்தர வெப்பத்தில்  வறுக்கவும். அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி கரடுமுரடாக அரைக்கவும்.

இப்போது ஒரு வாணலியில் நெய்யை உருக்கி பின்னர் முந்திரி, அரைத்த தேங்காய் ஆகியவை போட்டு வறுக்கவும். தேங்காயிலிருந்து ஈரப்பதம் நீங்கும் வரை வறுக்கவும்.

ஏலக்காயுடன் சர்க்கரை தூள் சேர்த்து அனைத்து பொருட்களையும் சேர்க்கவும் – வறுத்த தேங்காய், அரைத்த பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். மாவின் ஒரு பகுதியை எடுத்து மெல்லியதாக உருட்டவும். பின்னர் சோமாஸ் அச்சில்  எண்ணெய் தடவி  உருட்டி வைத்த மாவை உள்ளே வைக்கவும். பின்னர் பூரணத்தை வைத்து தண்ணீரின் உதவியுடன் இறுக்கமாக மூடுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சோமாஸை போடவும்.  குமிழ்கள் அடங்கி சோமாஸ்  பொன்னிறமாகும் வரை அதனை எண்ணெயில் மிதமான வெப்பத்தில் வறுக்கவும். மிகவும் சூடான எண்ணெயில் வறுக்க வேண்டாம். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். ருசியான சோமாஸ் தயார். உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்க. 

Views: - 32

0

0