உங்க வீட்டு நவராத்திரி ஸ்பெஷலாக இந்த தாமரைப்பூ விதைகள் பாயாசம் செய்து பாருங்கள்!!!

22 October 2020, 10:34 am
Quick Share

விசேஷம் என்றதுமே நம் நினைவிற்கு வருவது பாயாசம் தான். பால் பாயாசம், பருப்பு பாயாசம், அவல் பாயாசம் என பல விதமான பாயாசத்தை நிச்சயமாக நீங்கள் ருசித்து பார்த்திருப்பீர்கள். இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான தாமரைப்பூ விதைகளினால் ஆன பாயாசம் ஆகும். அதனை எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தாமரை விதைகள்- 2 கப்

பால்- 1/2 லிட்டர்

சர்க்கரை- 1/4 கப்

முந்திரி பருப்பு- 15

உலர்ந்த திராட்சை- 15

ஏலக்காய்- 3

குங்கும பூ- 2 சிட்டிகை

நெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:

இந்த பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி தாமைரைப்பூ விதைகளை வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது இதில் இருந்து சிறிதளவு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளலாம். கூடவே 5 முந்திரி பருப்பு, ஏலக்காய், குங்கும பூ ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள். 

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சுங்கள். பால் ஒரு கொதி நிலைக்கு வந்தபின் மீதமுள்ள தாமரை விதைகளை போடவும். ஐந்து நிமிடங்கள் இது கொதிக்கட்டும். இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை பழத்தை வறுத்து கொள்ளவும். 

இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கலந்து விடவும். பிறகு 1/4 கப் சர்க்கரை மற்றும் குங்கும பூ சேர்த்து கிளறி விடுங்கள். கடைசியில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் திராட்சை பழத்தை சேர்த்தால் தாமரைப்பூ விதைகள் பாயாசம் தயார். 

Views: - 25

0

0