குட்டீஸ் விரும்பி சாப்பிடும் செம டேஸ்டான பால் பொங்கல்!!!

14 January 2021, 10:43 pm
Quick Share

பொங்கல் பண்டிகை பொங்கல் இல்லாமல் முழுமையாகாது அல்லவா… ஆனால் வழக்கமாக செய்யும் பொங்கலுக்கு பதிலாக ஒரு முறை இந்த பால் பொங்கலை டிரை பண்ணி பாருங்க… இதனை எளிமையாக செய்து விடலாம். அதோடு சுவையும் அசத்தலாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1 கப்

பால்- 4 கப்

சர்க்கரை- 3/4 கப்

முந்திரி பருப்பு- 20

உலர்ந்த திராட்சை- 10

ஏலக்காய் பொடி- 1 தேக்கரண்டி

நெய்- 6 தேக்கரண்டி

செய்முறை:

*பால் பொங்கல் செய்வதற்கு முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து அதனை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். 

*தண்ணீரை வடிகட்டி இதனை ஒரு குக்கருக்கு மாற்றவும். 

*ஒரு கப் பச்சரிசிக்கு நான்கு கப் பால் ஊற்றவும் அல்லது மூன்று கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீரும் சேர்க்கலாம். 

*இதனோடு இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றவும். மிதமான சூட்டில் நான்கு விசில் வரும்வரை குக்கரை அடுப்பில் வைக்கவும்.

*பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை ஒரு கரண்டி கொண்டு கிளறி விடவும். இதனால் பொங்கல் நமக்கு குழைவாக கிடைக்கும். 

*கிளறிய பொங்கலில் 3/4 கப் சர்க்கரை அல்லது வெல்லம்  சேர்க்கவும். ஏற்கனவே இருக்கும் சூட்டில் சர்க்கரை உருகி விடும்.

*அடுத்து ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை போட்டு வறுக்கவும். 

*வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை பொங்கலில் சேர்க்கவும். கூடவே ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் மூன்று தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறவும். 

*அவ்வளவு தான்… செம டேஸ்டான பால் பொங்கல் தயார்.

Views: - 0

0

0