அட்டகாசமான ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி…!!!

2 March 2021, 11:54 am
Quick Share

முளைக்கட்டிய பச்சை பயறு உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் ஒரு சிலருக்கு முளைக்கட்டிய பச்சை பயறை அப்படியே சாப்பிட பிடிக்காது. எனவே அதனை வைத்து ஒரு சூப்பரான கிரேவி செய்து அதனை சூடான சாதம், சப்பாத்தி மற்றும் பூரியுடன் சாப்பிடலாம். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்துவிடும். இப்போது இந்த முளைக்கட்டிய பச்சை பயறு குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு/பாசி பயறு – 1/2 கப்

தேங்காய் மசாலா அரைக்க:-

துருவிய தேங்காய் – 1/2 கப்

வரமிளகாய் – 2

புளி பேட் – 1/4 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

*முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி செய்வதற்கு முதலில் 1/2 கப் பச்சை பயறு எடுத்து அதனை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

*பிறகு இந்த பயிரை ஒரு ஈரத்துணியில் போட்டு கட்டி தொங்க விடுங்கள்.

*அடுத்த நாள் பார்த்தால் பச்சை பயறு அனைத்தும் முளைக்கட்டி இருக்கும். 

*முளைக்கட்டிய இந்த பச்சை பயறு மேலும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

*இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து முளைக்கட்டிய பச்சை பயறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

*பயறு வேகும் சமயத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், வர மிளகாய், புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

*அரைத்த இந்த விழுதை வேக வைத்துள்ள பச்சை பயறோடு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள்.

*கிரேவி நன்கு கொதித்த பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

*அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கிரேவியில் கொட்டவும்.

*அவ்வளவு தான்… செம ருசியான முளைக்கட்டிய  பச்சை பயறு கிரேவி தயார்.

Views: - 23

0

0