வாயில் போட்ட உடனே கரையும் பன்னீர் ஜிலேபி!!!

By: Poorni
16 October 2020, 11:35 am
Quick Share

இன்று நீங்கள் இனிமையாக  ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஒரு மனநிலையில் இருந்தால், வாயில் போட்ட உடனே உருகும் பன்னீர் ஜலேபிகளை செய்வது பற்றி யோசித்து பாருங்கள். ஜிலேபி செய்வதற்கு சற்று பொறுமை அவசியம் தான் என்றாலும்  அனைத்து பொருட்களுடன் தயாராக இருந்தால் மற்றும் சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றினால் எளிய முறையில் ஜிலேபிகளை செய்து முடிக்கலாம். இப்போது பன்னீர் ஜிலேபி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

300 கிராம் – பன்னீர்

1 கப் – சர்க்கரை

குங்குமப்பூ, ஒரு சில இழைகள்

1/4 தேக்கரண்டி – ஏலக்காய் தூள்

¼ கப் – சோள மாவு

2 தேக்கரண்டி – மைதா மாவு

½ தேக்கரண்டி – சமையல் சோடா

1/4 தேக்கரண்டி – பேக்கிங் பவுடர்

நெய்- பொரிக்க தேவையான அளவு 

அலங்கரிக்க பிஸ்தா பருப்புகள்

செய்முறை:

* ஒரு அகலமான  பாத்திரத்தை சூடாக்கி, சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து, கலந்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். சர்க்கரை கரைந்து, ஒரு கம்பி பதம் கிடைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சிரப்பை சூடாக வைக்கவும்.

* ஒரு பெரிய கிண்ணத்தில் சோள மாவு, மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு மென்மையான மாவு பிசைந்து கொள்ளவும். 

* பன்னீரை நொறுக்கி சேர்த்து நன்கு பிசையவும்.  

* வாணலியில் நெய்யை சூடாக்கவும். ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து கோண் வடிவத்தில் சுருட்டி கொள்ளுங்கள். தயார் செய்து வைத்த கலவையில் சிறிதளவு உள்ளே ஊற்றி   சூடான நெய்யில் ஜிலேபியை சுடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை காத்திருக்கவும். 

* வறுத்த ஜலேபிகளை  சர்க்கரை பாகில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* சிரப்பிலிருந்து ஜலேபிகளை எடுத்து  பரிமாறும் தட்டில் வைத்து, பிஸ்தா பருப்புகளால் அலங்கரித்து பரிமாறவும்.

Views: - 63

0

0