பத்தே நிமிடத்தில் உங்களுக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை…!!!

16 August 2020, 12:52 pm
Quick Share

கொழுக்கட்டையில் நிறைய வகைகள் உண்டு. தேங்காய் பூரண கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, உளுந்து கொழுக்கட்டை, கம்பு கொழுக்கட்டை என்று ஏராளமான வகைகள் இருக்கு. இன்று நாம் பார்க்க  போவது ரொம்ப சுலபமான வெல்லப் பாகு பிடி கொழுக்கட்டை. 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 200 கிராம்

வெல்லம்- 150 கிராம்

நெய்- 1 தேக்கரண்டி

ஏலக்காய்- 1/4 தேக்கரண்டி

உப்பு- ஒரு சிட்டிகை

தேங்காய்- 1/4 கப்

செய்முறை:

கொழுக்கட்டை செய்ய முதலில் 200 கிராம் பச்சரிசியை அலசிவிட்டு இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஊறிய பிறகு ஒரு துணியில் அரிசியை விரித்து உலர வைக்கவும். கையில் தண்ணீர் ஒட்டாத அளவிற்கு அரிசி காய்ந்த பின் ஒரு மிக்ஸி ஜாரிர்கு மாற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த பிறகு தேவைப்பட்டால் சலித்து கொள்ளலாம்.

சலித்த மாவை ஒரு பேனில் போட்டு ஈரப் பதம் போய் வாசனை வரும் வரை குறைவான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். ஒரு வேலை நீங்கள் கடைகளில் விற்கப்படும் கொழுக்கட்டை மாவு அல்லது இடியாப்ப மாவை பயன்படுத்தினாலும் கூட வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு வெல்லம் போட்டு அதே கப்பில் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். 

வெல்லம் கரைந்த பிறகு அதனை வடிகட்டி தூசி இருந்தால் எடுத்து விடவும். வடிகட்டிய பிறகு அதனை அதே பேனில் ஊற்றி கொதிக்க விடுங்கள். இதனோடு ஒரு தேக்கரண்டி நெய், 1/4 தேக்கரண்டி  ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்க்கவும். இந்த பாகிற்கு பதம் எதுவும் தேவையில்லை. கொதித்து வந்தால் போதும்.

வெல்லப் பாகு கொதித்த பிறகு நாம் வறுத்து வைத்த மாவையும் போட்டு கிண்டி விடவும். முதலில் கொஞ்சம் கொழ கொழவென்று இருந்தாலும் சூடு ஏற ஏற அது கெட்டியாகி விடும். கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம். கொழுக்கட்டை மாவு தயாராகி விட்டது. இந்த மாவு கை வைக்கும் அளவிற்கு வந்ததும் கையில் நெய் தடவி கொழுக்கட்டை பிடித்து இட்லி தட்டில் வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் ஆவி வந்த பிறகு இட்லி தட்டில் வைத்து ஏழில் இருந்து பத்து நிமிடங்கள் வரை வேக விடுங்கள். அவ்வளவு தான்….  சுவையான கொழுக்கட்டை தயார்.

Views: - 40

0

0