ரசித்து ருசித்து சாப்பிட அசத்தலான அன்னாசிப்பழ கேக்!!!

29 September 2020, 7:58 pm
Quick Share

உங்கள் வீட்டில் அன்னாசிப்பழம் வாங்கினால் நிச்சயம் நீங்கள் இந்த அன்னாசிப்பழம் கேக்கை முயற்சி செய்து பார்க்க வேண்டும். இதனை மிகவும் எளிதாக செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த அன்னாசிப்பழம் கேக் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் துண்டுகள்- 5

நாட்டு சர்க்கரை- 250 கிராம்

வெள்ளை சர்க்கரை- 50 கிராம்

வெண்ணெய்- 115 கிராம்

முட்டை- 1

தயிர்- 60 கிராம்

பால்- 120 ml

மைதா மாவு- 210 கிராம்

பேக்கிங் பவுடர்- 1/2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1/4 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

பைனாப்பிள் சிரப்- 60 ml

வெண்ணிலா எசன்ஸ்- ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பைனாப்பிள் கேக் செய்வதற்கு 150 கிராம் நாட்டு சர்க்கரை, 50 கிராம் வெள்ளை சர்க்கரை, 115 கிராம் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பீட்டர் பயன்படுத்தி அடித்து கொள்ளவும். பிறகு 60 கிராம் தயிர், 120 ml பச்சை பால் சேர்த்து மேலும் அடித்து கொள்ளுங்கள். 

வேறொரு பாத்திரத்தில் 210 கிராம் மைதா மாவு, 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/2 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை கலந்து வையுங்கள். இதனை சர்க்கரை கலவையோடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பீட்டர் மூலம் கலக்கவும். 

இப்போது கலந்து வைத்த மாவோடு 60 ml பைனாப்பிள் சிரப், ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். கேக் டின்னில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி உருக்கி கொள்ளவும். அதன் மீது 100 கிராம் நாட்டு சர்க்கரை தூவி, பைனாப்பிள் துண்டுகளை உங்கள் விருப்பம் போல அடுக்கி கொள்ளுங்கள். 

விரும்பினால் இதன் மீது செர்ரி பழங்களையும் வைக்கலாம். இதன் மேல் தயார் செய்து வைத்த மாவை ஊற்றுங்கள். ஓவனை 180° F யில் பத்து நிமிடங்கள் சூடு செய்த பிறகு கேக் டின்னை உள்ளே வையுங்கள். கேக் தயாராக 45 – 60 நிமிடங்கள் வரை ஆகும். கேக் முழுவதுமாக ஆறியதும் அதனை திருப்பி போடவும்.

Views: - 11

0

0