ஒரு முறை மதிய உணவுக்கு உடுப்பி ஸ்பெஷல் முங் பீன் மசாலா சாதம் டிரை பண்ணி பாருங்க!!!

9 March 2021, 10:30 am
Quick Share

எப்போ பார்த்தாலும் சாதம், குழம்பு என்று செய்வதற்கு பதிலாக வெரைட்டி சாதமும் செய்து கொடுங்கள். இதனை குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவையாக இருப்பதோடு, செய்வதற்கும் ஈசியாக இருக்கும். இப்போது உடுப்பி ஸ்பெஷல் முங் பீன் மசாலா சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

1 கப் வேகவைத்த சாதம்

1 கப் துருவிய தேங்காய்

10 சிவப்பு மிளகாய்

2 தேக்கரண்டி கடுகு

2 தேக்கரண்டி கடலை பருப்பு

1 தேக்கரண்டி உளுந்து பருப்பு

1 கைப்பிடியளவு பச்சை வேர்க்கடலை

2 தேக்கரண்டி வெல்லம்

தேவையான அளவு புளி

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு கறிவேப்பிலை

தேவையான அளவு மஞ்சள்

தேவையான அளவு பெருங்காயம்

செய்முறை:

*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து  மிளகாய், அரைத்த தேங்காய், கடுகு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து கருகி விடாமல் வறுக்கவும். 

*இதனை நன்கு ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

*அடுத்து அதே கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு ஆகிய இரண்டையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

*இதனோடு  வேர்க்கடலையையும் சேர்த்து வறுக்கவும்.

*பிறகு மஞ்சள் தூள், பெருங்காய தூள், கருவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு அனைத்து பொருட்களையும் நன்கு வதக்குங்கள்.

*நான்கு நிமிடங்கள் கழித்து வேக வைத்த சாதத்தை போட்டு கிளறவும்.

*இதனை மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… ருசியான உடுப்பி ஸ்பெஷல் முங் பீன் மசாலா சாதம் தயார்.

Views: - 13

0

0