இந்த சுலபமான சிற்றுண்டியை இன்றே உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்!!!

Author: Poorni
6 October 2020, 10:00 am
Quick Share

நம்மில் பெரும்பாலோர் எஞ்சி போன உணவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போகிறோம். எஞ்சிய இந்த உணவை அடுத்த வேலை உணவுக்கு சுவாரஸ்யமானதாக  மாற்றுவதற்கான வழிகளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறோம். ஆனால் ஒரு சில எளிய மாற்றங்கள் மூலம்  எஞ்சிய உணவை ஒரு சுவையான தயாரிப்பாக மாற்ற முடியும். அப்படி ஒரு ரெசிபி தான் இன்று நாம் பார்க்க இருப்பது. எனவே உங்களிடம் சில மீதமுள்ள கார்ன் ஃபிளேக்ஸ் இருந்தால், அதை ஒரு சத்தான சிற்றுண்டாக மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்:

2 தேக்கரண்டி – நீர்

2 தேக்கரண்டி – வெல்லம்

1 தேக்கரண்டி – புளி கூழ்

1 பல் – பூண்டு

தேவையான அளவு உப்பு 

1 தேக்கரண்டி – சிவப்பு மிளகாய் தூள்

1 கப் – கார்ன்ஃப்ளேக்ஸ் 

2 தேக்கரண்டி – எண்ணெய்

½ கப் – வேர்க்கடலை

1- வேகவைத்த உருளைக்கிழங்கு 

1/2 மாங்காய்

1- தக்காளி

2- வெங்காயம்

3- பச்சை மிளகாய், 

சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்

செய்முறை:

*முதலில் இதற்கு ஒரு சட்னி தயாரித்து கொள்வோம். 

* அதற்கு தண்ணீர் மற்றும் வெல்லம் ஒவ்வொன்றும் 2 தேக்கரண்டி எடுத்து அதனை  சூடாக்கவும்.

* வெல்லம் உருகியவுடன், 1 தேக்கரண்டி புளி கரைசல்  சேர்க்கவும். 

* சட்னி கெட்டியாக கிடைக்க இதனை ஓரிரு நிமிடங்கள்  சமைக்கவும்.

* 1 பல் பூண்டு, சிறிது உப்பு, 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து சமைக்கவும்.

* சட்னி தயாரானதும் பூண்டினை அகற்றி விடவும்.

* இப்போது சட்னி தயாராக உள்ளது. 

* அடுத்து ஒரு கடாயில், இரண்டு தேக்கரண்டி  எண்ணெயில் அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

* வேர்க்கடலையை எண்ணெயில் வறுக்கவும். சிறிது உப்பு சேர்த்து பச்சை  வாசனை நீங்கும் வரை சமைக்கவும். வறுத்ததும், அவற்றை வெளியே எடுக்கவும்.

* இப்போது மீதமுள்ள எண்ணெயில்; கார்ன்ஃப்ளேக்குகளை சேர்க்கவும். மேலும் உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும். 

* கார்ன்ஃப்ளேக்ஸ் சிறிது குளிர்ந்து போகட்டும்.

* பின்னர் மசாலா வேர்க்கடலையை கலந்து, வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.  சேர்க்கவும். கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளையும் சேர்க்கவும்.

* இப்போது நாம் தயார் செய்து வைத்த சட்னியில் இரண்டு தேக்கரண்டி  சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். நமது சுவையான சிற்றுண்டி இப்போது தயாராக உள்ளது. 

Views: - 34

0

0