மழைக்கால உணவில் நெய்யின் முக்கியத்துவம்… !!!

Author: Hemalatha Ramkumar
27 June 2023, 3:54 pm
Quick Share

மழைக்காலம் கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆகவே மழைக்காலத்திற்கு ஏற்ற உணவை மாற்ற வேண்டிய நேரம் இது. மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த வெப்ப நிலைக்கு ஏற்றவாறு நமது உடலை பராமரிக்கவும் உதவக்கூடிய உணவுகளில் நெய்யும் ஒன்று. இந்த பதிவில் மழைக்காலத்தில் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

நெய்யில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இது நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே போன்றவை மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நெய்யில் காணப்படுகிறது. இவை வீக்க எதிர்ப்பு பண்புகளுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இணைந்து பல்வேறு விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

செரிமான குழாயில் உணவு எளிதாக செல்வதை ஊக்குவிப்பதன் மூலமாகவும், வீக்கத்தை குறைப்பதன் மூலமாகவும் நெய் உணவுகளின் செரிமானத்திற்கு சிறந்த ஒரு பொருளாக கருதப்படுகிறது. தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வது செரிமான அமைப்பில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அதோடு ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. குமட்டல், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நெய் சாப்பிடுவதால் நிர்வாணம் பெறலாம்.

பொதுவாக மழை காலங்களில் நாம் அதிக சுறுசுறுப்பாக இருக்க மாட்டோம். ஒருவித சோர்வு நம்மை சூழ்ந்திருக்கும். இந்த சமயத்தில் நெய் சாப்பிடுவது நமது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் நமக்கு அதிக ஆற்றல் கிடைப்பதோடு உடல் எடையும் குறைகிறது.

நெய்யில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதன் காரணத்தால் இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நினைவாற்றல், செறிவாக்கல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை அதிகப்படுத்த நெய் உதவுகிறது. கூடுதலாக நெய்யில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது மனநிலையை மேம்படுத்துவதன் மூலமாக மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள உதவுகிறது.

பல்வேறு முக்கியமான வைட்டமின்களான வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே 2 ஆகியவை நெய்யில் காணப்படுகிறது. இந்த வைட்டமின்கள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு அவசியமானவை. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு நல்லது, வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது, வைட்டமின் ஈ செல்கள் சேதம் அடைவதை தடுக்கிறது மற்றும் வைட்டமின் கே2 ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் ஊட்டச்சத்தை உடல் முழுவதும் கொண்டு சேர்க்கிறது.

வைட்டமின்கள் மட்டுமல்லாமல் நெய்யில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க் மற்றும் இரும்பு சத்து போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன. இது ஆரோக்கியமான எலும்புகள், சருமம் மற்றும் தலைமுடிக்கு பங்களிக்கிறது. மழைக்காலத்தில் குறைவான சூரிய ஒளியின் காரணமாக ஏற்படும் ரத்த சோகையை போக்க இரும்பு சத்து பெரிதும் உதவுகிறது. எனவே மழைக்கால உணவில் நெய்யை சேர்த்துக் கொள்வது நிச்சயமாக உங்களுக்கு நிறைய பலன்களை தரும். குறிப்பாக பசு நெய்யை பயன்படுத்துவது இந்த பலன்களை இன்னும் அதிகரிக்கும்!

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1931

0

0