பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப்பொருள்!!!

Author: Hemalatha Ramkumar
19 June 2023, 3:36 pm
Quick Share

பார்ப்பவரை கவர்ந்து இழுக்கக்கூடிய அழகு ததும்பும் பூக்களில் ஒன்று சூரியகாந்தி பூ. சூரியகாந்தி பூக்களில் இருந்து கிடைக்கும் விதைகள் நமது ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மை பயக்கக் கூடியது. ஏனெனில் சூரியகாந்தி பூக்களின் விதைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.

கொலஸ்ட்ரால் முதல் நீரிழிவு நோய், மூளை வளர்ச்சி வரை பல பிரச்சினைகளுக்கு சூரியகாந்தி விதைகள் தீர்வு தருகிறது. சூரியகாந்தி விதைகளில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சிகளுக்கு எதிரான பண்புகள் காணப்படுகிறது. மேலும் ஏராளமான வைட்டமின்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் சூரியகாந்தி விதைகளில் உள்ளது. ஆகையால் இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.

சூரியகாந்தி விதையில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலமானது நமது ரத்த நாளங்களுக்கு நலன் தரக்கூடியது. உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த சர்க்கரைக்கு தீர்வு தருகிறது. சூரியகாந்தி விதைகளை தினசரி உட்கொள்ளும்
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு
குறைவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

சூரியகாந்தி விதையில் ஏராளமான கால்சியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதால் இது மூளையின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாக இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை சூரியகாந்தி விதையில் உள்ள கால்சியம் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து கவனித்து கொள்கிறது.

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து சூரியகாந்தி விதைகளில் அதிக அளவில் இருப்பதால் அதனை சாப்பிட்டவுடன் நமக்கு பல மணி நேரத்திற்கு பசி எடுக்காது. அதோடு செரிமானமும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சூரியகாந்தி விதைகளில் குறைந்த கலோரிகளை காணப்படுகின்றன. இந்த காரணங்களால் இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது.

ரத்த சோகை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் சூரியகாந்தி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையிலிருந்து விடுபடலாம். ஏனெனில் சூரியகாந்தி விதையில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது. இதன் காரணமாக இது ரத்த சோகைக்கு தீர்வாக அமைகிறது.

சூரியகாந்தி விதைகளுக்கு பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உள்ளது. ஆகையால் இது உடலில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடி அவற்றை வெளியே தள்ளுகிறது. ஆகையால் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் மற்றும் நச்சுகள் நமது உடலில் இருந்து அகற்றப்படுகின்றன.

மினுமினுப்பான சருமம் வேண்டுமென்று நினைப்பவர்கள் சூரியகாந்தி விதைகளை தாராளமாக சாப்பிடலாம். இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் இருப்பதால் இது தொற்றுகள் ஏற்படுவதை தடுப்பதன் மூலமாக தெளிவான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் சூரியகாந்தி விதையில் ஒலிக் மற்றும் லீனோலிக் அமிலங்கள் இருப்பதால் இது தழும்புகள் மற்றும் காயங்களை விரைவாக ஆற்றக்கூடிய கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 298

0

0