மலச்சிக்கலில் இருந்து விடுபட முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சில வீட்டு வைத்தியங்கள்…!!!

Author: Hemalatha Ramkumar
20 April 2023, 2:07 pm
Quick Share

ஒரு சிலர் எப்பொழுதாவது மலச்சிக்கல் பிரச்சனை காரணமாக அவதிப்படுவர். இன்னும் சிலருக்கு மாதத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறையாவது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். ஆனால் ஒரு சிலர் தினமும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இந்த வேதனையை வார்த்தையில் விவரிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்பது உங்கள் உடல் செயல்பாடு மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்து அளவைப் பொறுத்தது. மறுபுறம், பயணம், உணவுமுறை மாற்றங்கள் போன்றவற்றாலும் இது ஏற்படுகிறது. வருந்தாதீர்கள்… உங்கள் பிரச்சினைக்கான தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி, காய்ச்சலுக்கு நம் முன்னோர்கள் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தினர். அப்படியான சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

போதுமான தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலை போக்க உதவும் எளிதான வழியாகும். ஒரு நபர் நீரிழப்புக்கு ஆளானால், உடலானது அதன் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தண்ணீரை சேகரிக்கிறது. எனவே, தினமும் நல்ல அளவில் தண்ணீர் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 100 மில்லி தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரை பருகலாம். இது வீட்டில் இருந்தபடியே மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்றுவது மலச்சிக்கல் பிரச்சினைக்கு உதவும். மேலும் குடல் இயக்கம் சீராக இருக்கும் போது, உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

ஓடுதல், நடைபயிற்சி, விளையாட்டு போன்றவற்றை தினமும் 15 – 20 நிமிடங்கள் என்ற வீதம் அதிகாலை மற்றும் மாலை வேலையில் செய்யுங்கள்.

ஆமணக்கு எண்ணெய் இயற்கை மலமிளக்கி உள்ளது. இது மலத்தை மென்மையாக்க உதவுகிறது. மேலும் எந்த முயற்சியும் சிரமமும் இல்லாமல் உடலில் இருந்து மலத்தை வெளியேற்ற அனுமதிக்கிறது. ஆமணக்கு எண்ணெயை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பருக வேண்டும். இதற்கு 15 மில்லி ஆமணக்கு எண்ணெயை குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்னர் ஏதேனும் பழச்சாறுகளுடன் கலந்து பருகலாம்.

சூடான பானங்கள் செரிமான மற்றும் இரைப்பை குடல் அமைப்புகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. டீயில் பல ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் உள்ளன. அவை வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. இஞ்சி, சாமந்திப்பூ, புதினா போன்றவை ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
அதிகாலையில் பிளாக் டீ குடிப்பது பலன் தரும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 303

0

0