வாட்டி வதைக்கும் ஜலதோஷத்திற்கு குட்-பை சொல்ல நேரம் வந்தாச்சு!!!

Author: Hemalatha Ramkumar
20 June 2023, 6:53 pm
Quick Share

உலகில் உள்ள அனைவரும் பாதிப்பிற்கு உள்ளாக கூடிய நோய்களில் ஒன்று ஜலதோஷம் ஆகும். பனிக்காலம் மற்றும் மழைக்காலங்களில் மக்கள் பலரும் இருமல், தும்மல், ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். நூற்றுக்கும் அதிகமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஜலதோஷத்தை ஏற்படுத்தக் கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் ஒரு சில நாட்களுக்கு நம்மை மிகுந்த தொல்லைக்கு உள்ளாக்கி விடுகிறது.

அதிக குளிர்ச்சியால் தலையில் நீர் சேர்வதால் ஜலதோஷம் உண்டாகிறது. இந்த நீரை நம் உடலில் இருந்து வெளியேற்றவே மூக்கு அடைத்தல், தொண்டை வலி, இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் ஆகியவை அடுத்தடுத்து ஏற்படுகிறது. நம் உடல் ஆனது அதிக வெப்பத்திலிருந்து திடீரென்று அதிக குளிர்ச்சிக்கு மாறும்போதும் ஜலதோஷம் ஏற்படுகிறது.

பொதுவாக ஜலதோஷம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது உடலுக்கு அதிகப்படியான கலோரிகள் தேவைப்படும். அந்த சமயத்தில் நாம் கலோரி மிக அதிகமாக உள்ள போ பொருட்களை உண்ணுவது நல்லது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் மட்டுமே ஜலதோசம் நீடிக்கும். ஜலதோசத்தை நம் வீட்டில் உள்ள சில உணவுப் பொருட்களின் உதவியுடன் நம்மால் விரைவாக போக்க முடியும்.

தேவையான பொருட்கள்:
சிறிதளவு மஞ்சள் தூள், மிளகு, சுக்கு அல்லது இஞ்சி , இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர்.

மிளகு, சுக்கு அல்லது இஞ்சி , இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு ஆகிய பொருட்கள் அனைத்தையும் நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். நசுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்பு அதை இறக்கி ஒரு கப்பில் தேவையான அளவு ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தேன், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் நன்றாகக் கலக்கி விட வேண்டும்.

இதனை சூடாகவோ அல்லது சற்று வெதுவெதுப்பாகவோ குடிக்கலாம். இந்த பானத்தை உடனுக்குடன் தயார் செய்து குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தக் கூடாது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 288

0

0