இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் உங்களுக்கு சூப்பரான சில ஐடியாக்கள்!!!

Author: Hemalatha Ramkumar
29 April 2023, 10:21 am
Quick Share

நீரழிவு நோய் என்பது இன்று பலர் சந்தித்து வரும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் இந்த நீரழிவு நோயை நிர்வகிக்க பலரும் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஒரு சிலர் மருந்துகள் மூலமாக அதனை குணப்படுத்த முயற்சிக்கும் பொழுது, இன்னும் சிலர் வீட்டு வைத்தியங்கள் மூலமாக ரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ரத்த சர்க்கரையை குறைக்க உதவும் ஒரு சில உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடிய ஒரு சில உணவுப் பொருட்கள்:
நெல்லிக்காய்
: துவர்ப்பு சுவையுடைய உணவுப் பொருட்கள் சர்க்கரையின் அளவை மிக விரைவாக கட்டுப்படுத்தக்கூடியவை. நெல்லிக்காய்: துவர்ப்பு சுவையுடைய உணவுப் பொருட்களில் முக்கியமானது நெல்லிக்காய். நெல்லிக்காயை ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாகவோ அல்லது வத்தலாகவோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இது இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

பேரிக்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். இதற்கு பேரிக்காய் நல்லதொரு தீர்வாக அமைகிறது. பேரிக்காயில் உணவு செரிமானத்தை அதிகமாக்கி மலச்சிக்கலை போக்கக்கூடிய சத்துக்கள் அதிகம் உள்ளன.

வேகவைத்த வேர்க்கடலை:சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் கால் குத்தல், கால் மதமதப்பு, கால் எரிச்சல், குதிகால் கூச்சம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கு வேகவைத்த வேர்க்கடலை உண்பது நல்லது. வேக வைத்த வேர்க்கடலையில் உள்ள ரெஸ்பிரிட்ரோ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தம் சீராக செல்ல உதவுகிறது எனவே சர்க்கரை நோயாளிகள் அனைவரும் வேக வைத்து வேர்க்கடலை உண்பது நல்லது.

சிறுதானிய உணவுகள்: கம்பு, கேழ்வரகு, தினை, கொண்டைக்கடலை, மொச்சைக் கொட்டை, கொள்ளு, தட்டைப்பயிறு போன்ற தானியங்களில் அதிக அளவு கனிமச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் நார் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகள் தவிர்க்கப்படுகிறது.

கீரைகள்: முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை போன்ற கீரைகளில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த நார் சத்துக்கள் நமது உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கீரை உட்கொள்வது மிகவும் நல்லது.

சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சர்க்கரை நோயாளிகள் முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு தவிர்க்க முடியாதவர்கள் மீன் உணவை எடுத்துக் கொள்ளலாம். மீன்களில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 404

0

0