தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியைக் கூட நொடிப்பொழுதில் மாயமாக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
10 April 2023, 10:34 am
Quick Share

தலைவலி என்பது ஒரு மோசமான அனுபவமாக இருக்கும் போது, ஒற்றைத் தலைவலி அதை விட கொடுமையானது. ஒரு சிலர் தலைவலியைப் போக்க மருந்து மாத்திரைகளை நாடுகின்றனர். எனினும், அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஆகையால் முடிந்த வரை வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வது சிறந்தது. அப்படி தலைவலியை போக்கக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று நம் உடலில் தண்ணீர் இல்லாதது. உங்களை சரியாக நீரேற்றம் செய்வது நமது நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உங்களை நன்கு நீரேற்றமாக வைத்திருங்கள். ஃபிரஷான ஜூஸ், தண்ணீர், இளநீர் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடவும். தேநீர் மற்றும் காபி போன்ற காஃபின் நிறைந்த பானங்களை தவிர்க்கவும்

நம் உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு நம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, சரிவிகித உணவை சாப்பிடுவது அவசியம். ஒருவர் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவை தாமதமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

நமது மூளையின் சரியான செயல்பாட்டிற்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது மற்றும் குளுக்கோஸ் இல்லாததால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம். இதன் விளைவாக தலைவலி ஏற்படுகிறது. எனவே, சரியான மற்றும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றி, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கவும்.

போதுமான அளவு நேரம் தூங்குங்கள்.
தலைவலிக்கு சிகிச்சையளிப்பதற்கும் அதைத் தடுப்பதற்கும் மற்றொரு சிறந்த வழி தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது ஆகும். ஏனெனில், தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சீர்குலைத்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 241

0

0