உடல் எடையை குறைக்க பாதாம் பருப்பை இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்களேன்!!!

Author: Hemalatha Ramkumar
26 June 2023, 10:45 am
Quick Share

இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு பெறப்படும் பருப்பு வகைகளில் நமது உடல் நலத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பது நாம் அறிந்ததே. அதில் குறிப்பாக பாதாம் பருப்பு ஏராளமான சத்து நிறைந்த பருப்பு வகையாக கருதப்படுகிறது. பாதாம் பருப்பில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.

தற்போது பெரும்பாலான வீடுகளில் காலையில் பாதாமை ஊற வைத்து அதனை தோலுரித்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக இது குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சாப்பிடுவது நினைவாற்றல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

பாதாம் பருப்பில் நார்ச்சத்து நிறைந்திருக்கும் காரணத்தினால் இது செரிமானத்தை அதிகரிக்கிறது. எனவே காலையில் பாதாம் பருப்பை சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க பெரிதும் உதவுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் சரும ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் என பாதாம் பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் இன்னும் எக்கச்சக்கமாக உள்ளது.

பாதாமில் காணப்படும் புரதச்சத்து மற்றும் வைட்டமின் காரணமாக அது எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. மேலும் பாதாம் ஒரு எனர்ஜி பூஸ்ட்டராக செயல்படுகிறது. பாதாம் பருப்பை சாப்பிடுவது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுவதால் பாதாம் எடை இழப்புக்கான ஒரு அருமையான உணவாக கருதப்படுகிறது.

தினமும் பாதாம் சாப்பிடுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்ற பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது. ஆகவே எடை இழக்க முயற்சிக்கும் நபர்கள் பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
எனினும் பாதாமில் இருக்கக்கூடிய முழு பலன்களையும் அடைய பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடணும் சாப்பிட வேண்டுமா அல்லது பச்சையாக சாப்பிட வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அதற்கான பதிலை இப்பொழுது பார்க்கலாம்.

பாதாம் பருப்பின் தோலில் பாலிபீனால்கள் இருக்கும் காரணத்தினால் அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து செரிமானத்திற்கு அவசியம். செரிமான பிரச்சினைகளில் இருந்து விடுபட நினைப்பவர்கள் பாதாமை தோலுடன் சாப்பிடலாம். ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று நினைக்கும் போது, பாதாம் பருப்பை சாப்பிடுங்கள் அல்லது வேலையில் சலிப்பு தட்டும் போது பாதாமை சாப்பிடுவது உங்களுக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படும். ஆகவே பாதாம் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ஆக செயல்படுகிறது. தேவையற்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு உடல் எடை அதிகரிப்பதை இது கட்டுப்படுத்துகிறது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை அற்றவர்களுக்கு பாதாம் பால் ஒரு அற்புதமான ஆப்ஷன் ஆகும். பாதாம் பால் கடைகளில் கிடைத்தாலும் அதனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். அவ்வாறு செய்து சாப்பிடுவது நல்லது. பாதாமுடன் உப்பு, மற்றும் மிளகு சேர்த்து வறுத்து சாப்பிடுவது எடை இழக்க உதவும் ஒரு அற்புதமான யோசனையாகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1901

0

0