மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
14 November 2022, 6:30 pm
Quick Share

ஒரு மெழுகுவர்த்தி என்பது வெறும் அலங்காரத்தின் ஒரு பகுதி அல்லது ஒளியின் ஆதாரம் மட்டும் அல்ல. இன்று, ஒரு மெழுகுவர்த்தியானது கொண்டாட்டம், காதல், தியானம் மற்றும் பலவற்றைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

நமது உளவியல் ஆரோக்கியத்திற்கு வரும்போது நமது வாசனை உணர்வு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வாசனை தரும் மெழுகுவர்த்திகள் சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

உங்கள் வீடு/அலுவலகத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டு வந்து உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும். மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

மனநிலையை மேம்படுத்துகிறது:
நீங்கள் மனநிலை மோசமாக இருக்கும் நாட்களில், உங்கள் அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்தும். மெழுகுவர்த்தியின் இனிமையான நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாசனை உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது, உங்கள் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மனநிலையை மேம்படுத்தும் என்று நம்பப்படும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வாசனை திரவியங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது:
தூங்கும் முன் உங்கள் படுக்கையறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது அமைதியான சூழ்நிலையை உருவாக்க உதவியாக இருக்கும். உங்கள் தூக்க முறையை மேம்படுத்த சுற்றுப்புற சூழல் உதவுகிறது.
உங்கள் அறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால், நீங்கள் மிகவும் நிம்மதியாக இருப்பீர்கள். மேலும் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது:
அரோமாதெரபி உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து மன அழுத்தத்தை அகற்றுவதில் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. உங்களைச் சுற்றி வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவது கவலை மற்றும் மனச்சோர்வைச் சமாளிக்க உதவும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான உங்கள் தூக்கம் மற்றும் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

உங்கள் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது:
நம்மில் பெரும்பாலோர் பணி காரணமாக நாள் முழுவதும் மடிக்கணினிகள், தொலைபேசிகளோடு நாளை செலவழிக்கிறோம். இந்த கேஜெட்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளியானது ஏதோ ஒரு வகையில் நம் உடலுக்கு தீங்கு விளைவித்து. இது நம் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆகவே, உங்கள் அறை, அலுவலக அறை மற்றும் குளியலறையில் சில மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது ஒரு எளிய வழி.

உங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது
மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது அதிக கவனம் செலுத்த உதவும். மெழுகுவர்த்திகள் வெறும் அலங்காரப் பொருள் மட்டும் அல்ல. இது உங்கள் கவனத்தை அதிகரிக்கவும் உங்களை அதிக உற்பத்தி செய்யவும் உதவும்.

நல்ல நினைவுகளை நினைவுபடுத்த உதவுகிறது:
நம்மில் பெரும்பாலோர் நாள் முழுவதும் வேலை வேலை என்று நம் நேரத்தை செலவு செய்கிறோம். நம் அன்புக்குரியவர்களுடன் சில தருணங்களை ரசிக்க அல்லது கடந்த காலத்தில் நாம் செலவழித்த நல்ல நேரத்தை நினைவுபடுத்துவதற்கு நேரத்தை செலவிட மறந்துவிடுகிறோம். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது நிறைய நினைவுகளைத் தூண்டி உங்கள் மனநிலையை உயர்த்த உதவும் என்று ஒரு உளவியல் ஆய்வு கூறுகிறது. இது உங்களை மிகவும் மகிழ்ச்சியாக உணர வைப்பதோடு, எல்லா நல்ல நேரங்களையும் நினைவில் வைக்க உதவுகிறது.

Views: - 577

0

0