ஒரு நாளைக்கு இவ்வளோ நெய் தான் சாப்பிடணும்… இல்லன்னா ஆபத்து தான்!!!

Author: Hemalatha Ramkumar
19 April 2023, 6:34 pm
Quick Share

பலருக்கு நெய் என்றால் ஃபேவரெட். ஆனால் ஒரு சிலர் எடை அதிகரிப்புக்கு பயந்து நெய் சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இருப்பினும், நெய்யானது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா என்பது அதன் அளவை பொறுத்தே அமையும். ஒருவர் உணவில் எவ்வளவு நெய் இருக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதன் அடிப்படையில், விகிதாசார அளவில் நெய்யை உணவில் சேர்க்க வேண்டும். ராகி போன்ற ஒரு தினைக்கு, நீங்கள் பருப்பு மற்றும் சாதத்திற்கு சேர்ப்பதை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக நெய் சேர்க்க வேண்டும்.

சுவையை அதிகரிக்க நெய் போதுமானதாக இருக்க வேண்டுமே தவிர, அது உணவின் சுவையை மறைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது.
ஒரு நாளைக்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நெய்யின் அளவு இருக்க வேண்டும். எந்தெந்த உணவுகளுக்கு கூடுதலாக நெய் சேர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளுக்கு குறைவான நெய் தேவைப்படும் என்பதை அறிந்து அதற்கேற்ப நெய் சேர்க்கலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமான பல வைட்டமின்கள் நிறைந்த நெய், ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் ஒரு முறையாவது சேர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3-6 தேக்கரண்டி நெய் கிடைப்பது போதுமானது. முன்பு கூறியது போல முக்கியமான விஷயம் என்னவென்றால், நெய் உணவின் சுவையை அதிகரிக்க வேண்டுமே தவிர அதை மறைக்கக்கூடாது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு தளா ஒரு தேக்கரண்டி நெய் நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 254

0

0