காலை எழுந்ததும் இந்த ஒரு விஷயத்த மட்டும் பண்ணிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 November 2022, 7:20 pm
Quick Share

காலையில் எழுந்தவுடன் சூடான பானங்களை குடிப்பது நமது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான அமைப்புக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இது எல்லா பானங்களுக்கும் பொருந்துமா? வெறும் வயிற்றில் சூடான தேநீர் குடிப்பது புத்திசாலித்தனமான யோசனையல்ல. இது எந்தளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

பலர் தேநீருக்கு அடிமையாகி உள்ளனர். காலையில் ஒரு கோப்பை தேநீருடன் உங்கள் நாளைத் தொடங்குவது நல்லது. ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். உங்கள் தேநீருக்கு முன் ஏதாவது சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏன் என்று நீங்கள் யோசித்தால், இங்கே பதில் இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, காபி மற்றும் கிரீன் டீ, பால் டீ, ஊலாங் டீ, ப்ளாக் டீ போன்ற அனைத்து வகையான காஃபினேட்டட் பானங்களும் வெறும் வயிற்றில் வினைபுரியும். மேலும் சூடாக இருப்பது ஆபத்தை அதிகரிக்கிறது.

வெறும் வயிற்றில் சூடான தேநீர் குடிக்கக் கூடாது என்பதற்கான 3 காரணங்கள்:-
●வயிற்று எரிச்சல்
வெறும் வயிற்றில் வலுவாக காய்ச்சிய டீயைக் குடிப்பதால் வயிற்றில் எரிச்சல் ஏற்படக்கூடும் என்பதைக் காட்டுகிறது. வெறும் வயிற்றில் சகிக்க முடியாத அளவுக்கு சூடாக இருக்கும் தேநீரைக் குடிப்பதால் உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தையும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும், தேநீரில் உள்ள வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

தலைவலி
ஒரு சிலர் காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் தங்களுக்கு தலைவலி ஏற்படுவதாக கூறுவார்கள். ஆனால் டீ குடித்தால் தலைவலி வருமா என்ன? வெறும் வயிற்றில் குடிக்கும்போது தேநீரானது குமட்டல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் காஃபின் உள்ளதால் தூக்கமின்மை, கிளர்ச்சி அல்லது நடுக்கம் போன்ற பிரிச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதைத் தடுக்கிறது
டானின் மற்றும் காஃபின் போன்ற பாலிபினால்கள் இருப்பதால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும்போது, ​​உணவில் இருந்து இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனைக் குறைக்கலாம்.

Views: - 310

0

0