கண்ணாடியை நிரந்தரமாக அகற்ற ஆசையா… உங்களுக்கான குறிப்புகள்!!!

Author: Hemalatha Ramkumar
18 May 2023, 4:19 pm
Quick Share

எலக்ட்ரானிக் கேஜெட்கள், ஆன்லைன் கல்வி மற்றும் கேம்ஸ் ஆகியவற்றின் பயன்பாடுகளால், தற்போது இளம் வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 100 பேரில் கிட்டத்தட்ட 99 பேர் கண்கள் வறட்சி மற்றும் சிவத்தல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். மொபைல் சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் ஒருவரின் கண்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் கண் நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாகின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, குழந்தைகள் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 22 முறை கண் சிமிட்ட வேண்டும் என்றால், எலக்ட்ரானிக் திரைகளின் பயன்பாடு காரணமாக 50 சதவீதம் குறைவாக கண் சிமிட்டுகிறார்கள். நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும் பாதுகாக்கவும் உதவும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில குறிப்புகளை இப்போது காணலாம்.

*யோகா மற்றும் ஆயுர்வேதம் கண்பார்வை சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்.

*காலையிலும் மாலையிலும் 30 நிமிடங்கள் பிராணாயாமம் செய்யுங்கள்.

*பாலுடன் 1 ஸ்பூன் மஹாத்ரிபாலா க்ரிதா எடுத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை, உணவுக்குப் பிறகு இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

*கற்றாழை – நெல்லிக்காய் சாறு குடிக்கவும். நெல்லிக்காய் கண் பார்வையை கூர்மையாக்குகிறது.

*திரிபலா பொடியை ரோஸ் வாட்டரில் கலக்கவும். சாதாரண நீரை வாய் முழுவதும் வைத்து கொள்ளவும். திரிபலா ரோஸ் வாட்டரால் கண்களைக் கழுவவும்.

*திராட்சை மற்றும் அத்திப்பழம் சாப்பிடுங்கள்.

*தண்ணீரில் ஊறவைத்த 7-8 பாதாம் பருப்புகளை சாப்பிடுங்கள்.

*கேரட், கீரை, ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடவும்.

*கண்ணாடியை நிரந்தரமாக அகற்ற, பாதாம், பெருஞ்சீரகம் மற்றும் கற்கண்டுகளை பொடியாக்கி இரவில் வெதுவெதுப்பான பாலுடன் சாப்பிடவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 305

0

0