ஊரடங்கில் அரசு மதுபானக்கடையில் ரூ.1.50 கோடி சுருட்டல் : 7 ஊரியர்கள் அதிரடி நீக்கம்!!

1 October 2020, 12:45 pm
Tasmac Bribe - updatenews360
Quick Share

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி அரசு மதுபானக்கடையில் சுமார் 1-கோடிக்கு மேல் கையாடல் செய்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்- ஆறுமுகநேரி சாலையில் அரசு மதுக்கடை இயங்கிவருகிறது. இந்தக்டையில் மூன்று மேற்பார்வையாளர்கள் 4 விற்பனையாளர்கள் என 7 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல் அரசு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து மதுபாட்டில்களின் விலையை அரசு உயர்த்தியது. இதனால் அனைத்து மதுக்கடைகளிலும் மதுபாட்டில்களின் முந்தைய இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை கணக்கிடப்பட்டது.

அப்போது நடைபெற்ற தணிக்கையில் ஆறுமுகநேரி மதுக்கடையில் சுமார் ஒரு கோடிக்கு மேல் கணக்கில் குளறுபடி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மேலதிகாரிகள் மதுக்கடை ஊழியர்களான 3 – மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 – விற்பனையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த ஓராண்டுக்கு மேல் மதுக்கடையில் விற்பனை செய்த மதுப்பாட்டில்களின் விபரங்களை மறைத்து பணம் கையால் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அதிர்ச்சியடைந்த மேலதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடை ஊழியர்களை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தியதோடு மாற்று பணியாளர்களை அங்கு பணியில் அமர்தியுள்ளனர்.

மேலும் கையாடலில் சம்மந்தப்பட்ட 3 – மேற்பார்வையாளர்கள் , மற்றும் 4 விற்பனையாளர்கள் என 7 பேரிடம் இரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கையாடல் செய்யப்பட்ட பணத்தின் விபரம் முழுமையாக தெரிக்கப்படாத நிலையில் அதன் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடிக்கு மேல் இருக்கும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மதுக்கடை ஊழியர்களே சுமார் 1-கோடிக்கு மேல் கையாடல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 10

0

0