பொள்ளாச்சி வனப்பகுதியில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்? மறுப்பு தெரிவிக்கும் காவல்துறை : நடந்தது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan6 January 2022, 6:14 pm
கோவை : பொள்ளாச்சி அருகே மலைக்கிராமத்தில் புகுந்து சிறுமியை கடத்தி சென்ற மர்மநபர்கை உடனடியாக கண்டுபிடித்து தண்டனை வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி அடுத்த அலைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக வால்பாறை, மானாப்பள்ளி, பொள்ளாச்சி, உலந்தி மற்றும் உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த ஆறு வனச்சரகங்களில் சுமா 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினமான ஒன்றாம் தேதி வால்பாறை பகுதி மானாம்பள்ளி கூடமாட்டி மலைவாழ் மக்கள் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து வீட்டில் தனியார் இருந்த 11 வயது சிறுமியை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் மாலை 7 மணிக்கு மயக்கநிலையில் இருந்த சிறுமியை வாயில் துணியை கட்டி கண்களை கட்டியவாறு சிறுமியின் வீட்டருகே வீசிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் பழங்குடியின தன்னார்வ அமைப்புகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோவை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதே போல அடர்ந்த வனப்பகுதிக்குள் வெளியாட்களே வர முடியத சூழ்நிலையில் இந்த கிராமத்தில் எப்படி மர்மநபர்கள் உள்ளே எப்படி புகுந்தார்கள் சிறுமி குறித்து காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளதாக கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறியுள்ளார்.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் கூறியுள்ளார். அதாவது, சம்பவ இடத்திற்கு சென்று சிறுமி, அவரது பெற்றோர், அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாக கூறிய அவர், இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மர்ம நபர்கள் யாரும் புத்தாண்டு கொண்டாட வர வாய்ப்பே இல்லை என்றும், இங்கு வனத்துறை பணியாளர்கள், பழங்குடியின மக்களை தவிர யாராலும் எளிதாக சென்று வரவும் முடியாது என கூறியுள்ளார்.
11 வயது சிறுமிக்கு எதிராக பாலியல் சம்பவம் நடைபெற்றதா இல்லையா என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு பக்கம் இந்த சம்பவம் நடந்ததாக கூறும் நிலையில் மறுபுறம் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என பொய் புகாரளித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
0
0