நாட்டுத் துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவன் கைது.!

3 May 2020, 4:49 pm
Ramanad oner Arrest - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் : கமுதியில் போலீசார் வாகன சோதனை போது நாட்டு துப்பாக்கி மற்றும் அரை கிலோ கஞ்சாவுடன் வந்த ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – அருப்புக்கோட்டை சாலையில் 144 தடை ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் அரை கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கி அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு துப்பாக்கியை எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.