திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்: 20 ஆண்டு சிறை தண்டனை…போக்சோ நீதிமன்றம் அதிரடி!!

Author: Aarthi Sivakumar
27 August 2021, 2:12 pm
pocso judge
Quick Share

கோவை: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்பமாக்கி உள்ளார். சிறுமி கர்ப்பமானது சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வர கோவை மத்திய அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ரவி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Views: - 296

0

0