பேட்டரி வாகனங்களுக்கு 50% சாலை வரி தள்ளுபடி : சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 11:31 am
Battery Tax - Updatenews360
Quick Share

காற்று மாசுபடுவதைக் குறைக்க, அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 50% சாலை வரி தள்ளுபடி அளிக்கப்படும் என அமைச்சர் சந்திரப் பிரியங்கா தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கையில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா, சனிக்கிழமைகளில் பெண்களுக்கு என்று தனியாக போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நாளாக அறிவிக்கப்படும். மகளிர் மட்டும் பயணிக்க சிசிடிவி பொருத்தப்பட்ட பிங்க் பேருந்துகள் வாங்கப்படும்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து காற்று மாசுபடுவதைக் குறைக்க, அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 50% சாலை வரி தள்ளுபடி அளிக்கப்படும். இ-ரிக்சா பயன்பாட்டைக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் 200 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவித்தார்.

Views: - 356

0

0