50வது பொன்விழா ஆண்டு : அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை வெல்ல வேண்டும்.. ஓபிஎஸ் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 12:24 pm
OPS -Updatenews360
Quick Share

விழுப்புரம் : அதிமுகவின் 50வது பொன்விழா கொண்டாட உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலை அனைவரும் ஒற்றுமையாக பாடுப்பட்டு இந்த வெற்றியை காணிக்கையாக செலுத்த வேண்டும் என ஓ.பி.எஸ் பேசினார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் மாவட்ட செயலாளர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிப்பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற அம்மா (ஜெயலலிதா)அவர்கள் 52 விழுக்காடு நிதியை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதிக்கீடு செய்து பல்வேறு மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்தினார்.

அந்த திட்டங்கள் எல்லா வீடுகளுக்கும் கிடைத்துள்ளது என்று ஓ.பி.எஸ் சுட்டிக்காட்டு அதிமுக விற்கு வாக்கு சேகரித்தார். உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 24 சதவீதத்தை, 48 சதவீதமாக உயர்த்தியது அதிமுக ஆட்சியில் தான் என்றும் ஓ.பி.எஸ் பேசினார்.

கடந்த தேர்தலில் நாம் தோல்விக்கு ஆட்சி மீது உள்ள குறை இல்லை. ஆனால் தேர்தலில் சில வியூங்கள் தான் நம் தோல்விக்கு காரணம் என்று ஓ.பி.எஸ் பேசினார். கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மீதான கொலை வழக்கை இந்த அரசு துரிதப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்

கடந்த ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் வழங்கினோம் என்றார். மேலும் பேசிய ஓ.பி.எஸ், அதிமுக தொடங்கி 49 ஆண்டு காலம் வெற்றிக்கரமாக இயக்கத்தை நடத்தி வந்துள்ளோம்.

அடுத்த அக்டோம்பர் 14 ஆம் தேதி 50 ஆண்டு பொன் விழாவின் காணிக்கையாக அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டார்.

Views: - 342

0

0