திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை படையல் : கோவில் வாசலில் நின்று வணங்கிய பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 1:10 pm
Malaikottai Vinayagar -Updatenews360
Quick Share

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியான இன்று திருச்சி மலைக்கோட்டையில் விநாயகருக்கு 60, கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியான இன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் & உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

ஆனால், வழக்கமான தினசரி பூஜைகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன என்று கோயில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு காலை 9 மணிக்கு மேல் 30 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையை மங்கள வாத்தியம் முழங்க, தாயுமானவர் சன்னதியில் இருந்து தொட்டிலில் அடியார்கள் சுமந்து சென்று, உச்சிப்பிள்ளையாருக்கு படைத்தனர்.

தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் 30 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது. அரிசி மாவு, தேன், தினை மாவு, நெய் உள்ளிட்டவற்க் கொண்டு கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

வழக்கமாக மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ என மொத்தம் 150 கிலோவில் கொழுக்கட்டை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால், பக்தர்களுக்கும் அனுமதியில்லை என்பதால் தலா 30 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டுள்ளது.

கோயில் உதவி ஆணையர் விஜயராணி உள்ளிட்ட அலுவலர்கள், சிவாச்சாரியார்கள், வாத்திய கலைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், பக்தர்களால் நிரம்பி காணப்படும் மலைக்கோட்டை கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்களும் கோயில் வெளியில் நின்று வணங்கியபடி ஏமாற்றத்துடன் சென்றனர்.

Views: - 191

0

0