விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்…! சிபிஐ விசாரணை கோரி ஹைகோர்ட்டில் மனு

13 May 2020, 7:48 pm
High Court updatenews360
Quick Share

சென்னை: விழுப்புரம் சிறுமியின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை ஊரைச் சேர்ந்த ஜெயபாலுக்கும், முருகன் என்பவருக்கும் நீண்ட கால விரோதம் இருந்துள்ளது.  முருகன் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர். விழுப்புரம் சம்பவத்தை அடுத்து அவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குடும்ப பகை காரணமாக, முருகனும், கலியபெருமாளும் சிறுமி ஜெயஸ்ரீயை தீ வைத்து கொளுத்தினர். 95 சதவீதம் தீ காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 11ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, முருகன் மற்றும் கலியபெருமாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில், ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர், சிறுமியின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், இறுதி விசாரணை முடியும் வரை வழக்கை நீதிமன்றம் மேற்பார்வை செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply