பேருந்தை முந்த முயன்ற பைக்… சாலையை கடந்த முதியவர் : கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! பதைக்க வைக்கும் காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2021, 3:51 pm
கன்னியாகுமரி : நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஷாஜி (வயது 18), பிரேம்குமார் (வயது 22) களியக்காவிளையில் இருந்து குழித்துறை செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது களியக்காவிளை காவல் நிலையம் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்தை இருசக்க வாகனம் முந்த முயன்றது. அதே நேரத்தில் அப்பகுதியில் கடை நடத்தி வரும் நசீர் என்பவர் சாலையை கடக்க முயற்சித்தார்.
அரசுப் பேருந்து வருவதற்குள் கடந்து விடலாம் என நசீர் சாலையை கடக்கும் போது, அரசு பேருந்து அருகே இருசக்கர வாகனம் வந்ததை கவனிக்காததால் முதியவர் மீது பைக் மோதியது.
இதில் பைக்கில் இருந்த இளைஞர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் நசீர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக களியக்காவிளை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை உருவாக்கியுள்ளது.
0
0