பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்:பிரபலங்கள் இரங்கல்…!

Author: Udhayakumar Raman
12 October 2021, 11:00 pm
Quick Share

சென்னை: பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு பல்வேறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினி உள்ளிட்ட தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் 1960களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர் நடிப்பதற்கு முன்னர் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றினார். சிவாஜி கணேசன், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு வில்லனாகவும் நடித்துள்ளார்.

ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்ததுள்ளார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. ஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்துள்ளார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் மக்களிடம் நல்ல பிரபலமாக இருந்தார். இந்நிலையில், இன்று நடிகர் ஸ்ரீகாந்த் காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 303

0

0