“அம்மாவின் ஆட்சி தொடரும்” – அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உறுதி

12 August 2020, 11:15 am
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை முன்னிறுத்தி வெற்றி பெருவோம் என அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் போட்டி என்றால், இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையேதான். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கான முன்னோட்ட கருத்துக்களை வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று மதுரையில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் ஆர். பி. உதயகுமார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னிறுத்தி வெற்றி பெருவோம் என அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மக்கள் அதிமுகவை ஆதரிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டிருந்த நிலையில், அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரின் பணிவும், அவர்கள் மக்கள் மீது கொண்டுள்ள அக்கரையும்தான் அதிமுக அரசுக்கு வெற்றியை கொடுத்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இனி வரும் காலங்களிலும் அம்மாவின் ஆட்சி தொடரும் என ஆர். பி. உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

Views: - 9

0

0