தடுப்பு சுவரால் தடம் மாறிய கன்றுடன் சேர தாய்ப் பசு நடத்திய பாசப் போராட்டம் : சேர்த்து வைத்த காவலருக்கு குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2021, 4:13 pm
Cow - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : சாலையின் தடுப்பு கட்டைகளின் இருபுறங்களிலும் தாய்ப் பசுவும், கன்றும் தடம்மாறி ஒன்று சேர முடியாமல் பாசப் போராட்டம் நடத்தியதை பார்த்த காவலர் ஒன்று சேர வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் தாய் பசுவும், கன்றும் உணவு தேடிச் சென்றபோது தாய்ப்பசு மருத்துவ கல்லூரியில் இருந்து தஞ்சை நோக்கி வரும் பாதையிலும், கன்று தஞ்சையிலிருந்து மருத்துவ கல்லூரி செல்லும் பாதையிலும் தடம் மாறி சென்றுவிட்டன.

இதையடுத்து கன்று தடுப்பு சுவற்றின் மறுபுறம் நின்றிருந்த தாய் பசுவிடம் செல்லமுடியாமல் போராடி வந்தது. தாய்ப்பசு மற்றும் கன்றுவின் பாசப் போராட்டத்தை பார்த்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் இளையராஜா என்பவர் கன்றுவை நோக்கி தனது இருசக்கர வாகனத்தை இயக்கி மெல்ல மெல்ல தடுப்புக் கட்டையை ஒட்டி நடக்கச் செய்தார்.

கன்று நடந்து வருவதை பார்த்து அதே பாதையில் தாய்ப் பசுவும் எதிர்திசையில் நடந்து வந்தது. பின்னர் இரு சாலைகளும் ஒன்றிணையும் இடம் வந்தவுடன் சாலையின் மறுபுறம் இருந்த தாய்பசுவுடன் கன்று வேகமாக ஓடிச்சென்று சேர்ந்துகொண்டது.

இதனை முழுவதுமாக வீடியோ எடுத்து அவர் தனது சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டு அதில் இன்று காலை பணி நிமித்தமாக சென்றபோது தாயும் கன்றும் எதிரெதிர் திசையில் நின்று ஒன்று சேர முடியாமல் தவிப்பதை பார்த்து மனது கேட்கவில்லை. அதனால் இருவரையும் சேர்த்து வைத்தேன் இப்போது மனது மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த மனித நேயமிக்க செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 291

0

0