அதிமுக முன்னாள் அமைச்சர் உடல் நலக்குறைவால் மரணம்

12 January 2021, 7:03 pm
Quick Share

கோவை: முன்னாள் கால்நடைத்துறை அமைச்சராகவும், முன்னாள் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருந்த பா.வே தாமோதரன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

கோவை சுல்தான்பேட்டையை அடுத்த பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பா.வே.தாமோதரன். இவர் அதிமுக அரசில் கால் நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மேலும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும், ஆவின் தலைவராகவும் பதவி வகித்தவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்படவே,

சேலம்-கொச்சி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி பா.வே தாமோதரன் இன்று உயிரிழந்தார். நாளை அவரது உடல் பி.எஸ்.ஜி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 6

0

0