“தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும் நானும் தமிழன்தான்“ : ஊத்துக்குளியில் ராகுல் காந்தி பிரச்சாரம்!!

24 January 2021, 12:23 pm
Rahul - Updatenews360
Quick Share

திருப்பூர் : தமிழக மேற்கு மாவட்டங்களில், இரண்டாம் நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மூன்று நாள் சுற்று பயணத்தை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களை சந்தித்தார்.

இரண்டாம் நாளான இன்று திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி வந்த ராகுல்காந்திக்கு திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் வரேவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே பேசிய அவர் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும் நானும் தமிழன்தான், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கே வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் ஊத்துக்குளி மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற புறப்பட்டு சென்றார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 0

0

0