தமிழக வீர விளையாட்டை கற்க ஆர்வம் காட்டும் ஆந்திர மாணவர்கள்!!

24 September 2020, 7:57 pm
Thiruvallur Andhra Students- updatenews360
Quick Share

திருவள்ளூர் : தமிழர்களின் பாரம்பரிய வீர கலையான சிலம்ப விளையாட்டை கற்க ஆந்திர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பக் கலையை கற்று வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் உடல் ஆரோக்கியத்தையும் பெண்களின் பாதுகாப்பிற்கு அடித்தளமாக விளங்கக்கூடிய தற்காப்பு கலையான சிலம்ப கலையை பலர் ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.

கொரேனா வைரஸ் ஊரடங்கு  காரணமாக போதிய வருமானம் இன்றி தங்களது பயிற்சியை தொடங்குவதற்கு உதவிட கோரிக்கை வைத்திருந்த நிலையில் தேசிய சிலம்பப்  பயிற்சியாளர் முருகனி ஆகியோர் இணைந்து 100 மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் விளையாட்டினை கற்பதற்கு உதவிடும் வகையில் அவர்கள் பயிற்சி பெறுவதற்கு உரிய கம்பு  உபகரணங்கள் உடைகள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

பின்னர் தமிழக மாணவர்களை போன்று  தாங்களும் சிலம்பக் கலையை கற்க வேண்டும் என ஆர்வம் கொண்ட
ஆந்திர மாநில பாலாஜி குப்பம், திருவேங்கட நகர், பீமாவரிபாளையம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  சிலம்பாட்ட பயிற்சியை பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்..