கொஞ்சம் எங்க பகுதியையும் கவனிங்க : கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்ய கோரி பாஜகவினர் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 5:40 pm
Cbe Bjp Petition - Updatenews360
Quick Share

கோவை : கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட காந்திபார்க் பகுதியை சீரமைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட பா.ஜ.க.,வினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, கோவை காந்திபார்க் அடுத்த காமராஜர் சந்து பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். இங்கு அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

இதனிடையே கன மழையால் சாக்கடை நீரும் மழை நீரும் ஒன்றாக கலந்து வீட்டிற்குள் வருகிறது.
எனவே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Views: - 126

0

0