தமிழ் புத்தாண்டிற்கு சர்ப்ரைஸ்: சென்னை மெட்ரோ அறிவித்த அதிரடி ஆஃபர்…!!

13 April 2021, 8:29 am
chennai metro - updatenews360
Quick Share

சென்னை: தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு மற்றும் யுகாதியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிகளுக்கு அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், இன்று மற்றும் நாளை, 2 நாட்களிலும் மக்கள் 50 சதவீதம் கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.

இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை, அவ்வப்போது சில தள்ளுபடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.

மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட சமயத்தில் சில நாட்கள் இலவசமாக பயணிப்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது 50 சதவீத கட்டணம் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மக்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 22

0

0