ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி ; சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

By: Babu
9 October 2020, 1:44 pm
Bus Starts- Updatenews360
Quick Share

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்குகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. கொரோனா அதிகம் உள்ள மாவட்டமான சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக, பொது போக்குவரத்தில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. நாளடைவில் வழக்கமான கூட்டம் என்ற அளவில் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் வர இருப்பதால், பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

அதிலும், சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 300 கி.மீ.க்கு கூடுதலான தொலைவிற்கு பயணிக்கும் பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், தீபாவளி சிறப்பு பஸ்கள் குறித்து நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Views: - 40

0

0