ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!!

17 November 2020, 10:12 am
CM Letter TO PM - Updatenews360
Quick Share

ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவால் நாட்டின் 10 இடங்களில் இருந்து மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, நாட்டின் 10 இடங்களில் இருந்து மட்டுமே ஹஜ் புனித பயணத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், அதில் சென்னை இடம்பெறாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனித ஹஜ் பயணம் செல்வோருக்கான விமானங்களை சென்னையில் இருந்து இயக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 4,500 யாத்ரிகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

முதிய யாத்ரீகர்கள் அதிகம் இருப்பதால், சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டாவுக்கு சென்னையிலிருந்து விமானங்களை இயக்கினால் உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு இந்த பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்போது பாதுகாப்பாக அனுப்பும் வகையில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 15

0

0