கோவையில் 183 பேருக்கு இன்று கொரோனா : 5 பேர் பலி.!

8 August 2020, 7:39 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை : கோவையில் 183 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 200க்கும் மேல் இருந்த நிலையில் இன்ற்ய் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 17 பேர், செல்வபுரத்தை சேர்ந்த 8 பேர், காந்திமாநகரை சேர்ந்த 6 பேர், குனியமுத்தூர், உக்கடத்தை சேர்ந்த தலா 5 பேர் உள்பட 183 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 6 ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்த 89 வயது முதியவர், 67 வயது முதியவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வீரகேரளத்தை சேர்ந்த 75 வயது முதியவர், குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, சூலூர் அண்ணாமலை நகரை சேர்ந்த 44 வயது ஆண் ஆகிய 5 பேரும் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் என்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 7

0

0