கோவை மாநகராட்சி துணை ஆணையர் நீக்கம் : மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 8:05 pm
Cbe Corp Deputy Commissioner -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியின் துணை ஆணையரை பணியிலிருந்து விடுவித்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வந்த மதுராந்தகி திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக விமல்ராஜ் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஜூலை மாதம் 15ம் தேதி அவர் மாநகராட்சி துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற நாளில் இருந்தே விமல்ராஜ் பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் அவரை பணியில் இருந்து விடுவிப்பதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

Raja Gopal Sunkara on Twitter: "Joined as Commissioner, #Coimbatore  Municipal Corporation. Started as a Municipality in 1866, now a bustling  urban conglomeration. Please follow the @CbeCorp for grievance redressal  and updates.… https://t.co/CUkR2c2Cc8"

நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவகாகவும் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Views: - 204

0

0