எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மனைவியுடன் இளைஞர் உல்லாசம்.! கணவர் கைது.!!

1 August 2020, 1:01 pm
Cbe Illegal Contact Murder - Updatenews360
Quick Share

கோவை : மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த இளைஞரை அவரது கணவர் பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை குட்டம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி லிங்கம். இவர் ஐ.டி. படிப்பு பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி கோவைக்கு கடந்த 3 வருடத்துக்கு முன்பு வந்துள்ளார். கோவை விளாங்குறிச்சி ரத்தினகிரி ரோடு பகுதியில் அறை எடுத்து தங்கி குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இசக்கி லிங்கம் தங்கியிருந்த அறையில் வலிப்பு- வந்து இறந்து விட்டதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது இசக்கி லிங்கத்தின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் செய்த்தன்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் இசக்கி லிங்கத்திற்கும் சிட்கோ பிள்ளையார்புரம் காந்திநகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி அபுபக்கர் சித்திக் (வயது 38) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதனால் இசக்கி லிங்கத்தின் உறவினர்கள் அவர்களை கண்டித்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையேயான கள்ளகாதல் தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த அபுபக்கர் சித்திக் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்திலிருந்த அபுபக்கர் சித்திக், இசக்கி லிங்கத்தின் அறைக்கு சென்று, அங்கு தனியாக இருந்த இசக்கி லிங்கத்துடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது தொடர்ந்து அபூபக்கர் சித்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இசக்கி லிங்கத்தை கொலை செய்ய முயன்ற போது இசக்கி லிங்கத்தின் கையில் கத்திக்குத்து விழுந்தது.

தொடர்ந்து, அருகில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து இசக்கிலிங்கத்தின் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே இசக்கி லிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பேரில் அபூபக்கரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Views: - 55

0

0