வஉசி சிலை திறப்பு விழாவில் ஒரு சமூகத்தினர் மோதல் : குண்டுக்கட்டாக கைது!!!

25 February 2021, 8:17 am
Ops VOC - Updatenews360
Quick Share

தேனி : துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்ட வ உ சி வெங்கல சிலை திறப்பு விழாவில் ஒரு சமூகத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு அடிதடி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வஉசி அவர்களின் திருவுருவ சிலைகளை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து திறந்து வைத்தார்.

கடந்த 16 வருடங்களாக மண் சிலையாக இருந்த வஉசி சிலையினை வெங்கல சிலையாக மாற்றித் தரும்படி வேளாளர் சமுதாய சங்கத்தினர் துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையினை ஏற்று தமிழக துணை முதல்வர் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வ உ சி சிலையை வெங்கல சிலை ஆக மாற்றி தருவதாக உறுதி அளித்து நேற்று வெங்கல சிலை நிறுவப்பட்டது.

வெங்கல சிலையை இணை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் மேடை முன்பாக காத்திருந்த ஒரு சமூகத்தினர் நாங்கள்தான் வேளாளர்கள் என்று கோஷமிட்டனர்.

கோசமிட்டம் நபர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போடி சரக காவல்துறை கண்காணிப்பாளரிடம் பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட தப்பி ஓடிய நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதனால் விழா மேடையில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த பின்பு விழா தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தற்போது 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பின் விழா மேடையில் வஉசி பற்றிய சிறப்புரையை ஒ பன்னீர்செல்வம் பேசத் தொடங்கினார்.

Views: - 76

0

0