கொரோனா பாதிப்பும், பலியும் : சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உச்சம்.!!

15 August 2020, 6:40 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 5860 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 444 ஆக உள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மவாட்டங்களில் இன்று பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 127 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 5 ஆயிரத்து 236 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று 422 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 376 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 184 பேருக்கும் , மதுரையில் 90 பேருக்கும் , கோவையில் 290 பேருக்கும், கடலூரில் 340 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்று முதன்முறையாக முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 26 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 பேரும், மதுரை மற்றும் கோவையில் இன்று 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Views: - 24

0

0