கொரோனா : கோவையில் 238 பேருக்கு பாதிப்பு உறுதி

5 November 2020, 9:26 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 238 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் வெளியிட்ட பட்டியலில் கோவை ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 238 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது. தவிர தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியியில் செங்கல்பட்டு மாவட்டத்தை பின்னுக்குத்தள்ளி கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தவிர கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 43 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 569 அதிகரித்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 270 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 42 ஆயிரத்து 871 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 18

0

0